Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மன்னிப்பு கேட்க முடியாது தமிழகம் முழுவதும் போஸ்டர்

சென்னை: கர்நாடக அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்க முடியாது எனக்கூறி தமிழகம் முழுவதும் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என சொன்னார். இதற்கு கன்னட அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர். இந்நிலையில் தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் கமல் ரசிகர்கள் பலரும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், ‘அன்பு மன்னிப்பு கேட்காது’ என்றும் ‘சத்தியம் தலை வணங்காது’ என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.