சென்னை: காவல்துறை அதிகாரியாக வசந்த் ரவி நடித்த ‘இந்திரா’ என்ற படம், வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் அவருடைய ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ளார். பஞ்சாபி, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் அவர், இதற்கு முன்பு தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில்,...
சென்னை: காவல்துறை அதிகாரியாக வசந்த் ரவி நடித்த ‘இந்திரா’ என்ற படம், வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் அவருடைய ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ளார். பஞ்சாபி, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் அவர், இதற்கு முன்பு தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், ‘இந்திரா’ படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு சென்னைக்கு வந்திருந்த மெஹ்ரின் பிர்சாடா கூறியதாவது: நான் மும்பையில் இருந்தபோது, டைரக்டர் சபரீஷ் நந்தா போன் செய்து முழு கதையை சொன்னார்.
அவர் ஒரு புது இயக்குனர் என்றாலும், கதை சொல்லும்போது அவரிடம் தெளிவு இருந்தது. மிகவும் அற்புதமாக கதையையும், என் கேரக்டரையும் பற்றி சொல்லி முடித்தார். அதுபோல், படத்தையும் அட்டகாசமாக இயக்கியுள்ளார். படப்பிடிப்பில் நான் கலந்துகொண்டு நடித்த ஒவ்வொரு நாளும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நிஜமாகவே கயல் கதாபாத்திரம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கேரக்டர் என்று சொல்லலாம். ஹீரோ வசந்த் ரவியுடன் இணைந்து நடித்தது, மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. தமிழ் எனக்கு புரியும். சரளமாக பேச வராது. எனவே, படப்பிடிப்பில் தமிழ் வசனங்களை எல்லாம் அவர்தான் எனக்கு கற்றுக்கொடுத்தார். இயல்பாகவே அவர் ஒரு நல்ல திறமையான நடிகர்.