Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழுக்கு வந்த கன்னட சைத்ரா

அருண்விஷ்வா தயாரித்துள்ள ‘3 BHK’ என்ற படம், வரும் ஜூலை 4ம் தேதி திரைக்கு வருகிறது. ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஸ்ரீகணேஷ் எழுதி இயக்கியுள்ளார். பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா நடித்துள்ளனர். படம் குறித்து சைத்ரா கூறுகையில், ‘முதல் வேலை, முதல் வண்டி என்பது நமக்கு எவ்வளவு ஸ்பெஷலோ, அதுபோல் நான் நடித்த முதல் தமிழ் படமான ‘3 BHK’ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ளேன். சரத்குமார், தேவயானி நடித்த ‘சூர்யவம்சம்’ படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்றே தெரியாது. மீண்டும் அவர்கள் ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக நான் நடித்திருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கு தமிழில் சரளமாக பேச வரும். எனவே, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க காத்திருக்கிறேன். படப்பிடிப்பில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட அனைவரும் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தனர்’ என்றார்.

தேவயானி கூறும்போது, ‘பல வருடங்கள் கழித்து சரத் குமார் சாருடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறேன். இப்போதும் ‘சூர்யவம்சம்’ படம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. சித்தார்த் மிகப்பெரிய திறமைசாலி. மீதா ரகுநாத், சைத்ரா இருவரும் ஸ்வீட் ஹார்ட்ஸ். இசை அமைப்பாளர் அம்ரித் ராம்நாத்துக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது’ என்றார்.