சென்னை: தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் கயாடு லோஹரிடம் தன் மீது எழும் விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “சோஷியல் மீடியாக்களில் என்னைப் பற்றி பரவும் அவதூறு கருத்துகள் மிகவும் வேதனை அளிக்கிறது.
ஒரு கண்ணியமான பின்னணியில் இருந்து வருபவள் நான், எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் என்னை ஏன் சிலர் டார்கெட் செய்கிறார்கள்? பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், ஆழ் மனதில் அது உறுத்திக் கொண்டே இருக்கும். இதனால் பல நாள் தூக்கம் இழந்தேன்’’ என்றார் கயாடு லோஹர்.
