Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தெலுங்கு நடன இயக்குனர் மரணம்

ஐதராபாத்: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தெலுங்கு பட நடன இயக்குனர் ராகேஷ், மாரடைப்பால் காலமானார். தெலுங்கு திரையுலகின் பிரபல நடன இயக்குனரான ராகேஷ் (53), கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பிய அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது அதன் தீவிரம் அதிகமானதால் அவதிப்பட்டு வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி ராகேஷ் காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.