Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரமிக்கவைக்கும் விலைக்கு விற்பனை ஆன தளபதி 68 இசை உரிமம்

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஜய் நடிக்க உள்ள அவரது 68வது படம் பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டது. விஜய் தற்போது நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு 68வது படத்தின் அப்டேட்டுகளை வெளியிட வேண்டும் என விஜய் சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது விஜய் 68 படத்தின் இசை உரிமை 25 கோடிக்கும் மேல் விற்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார்.

அதனால், இப்படத்தின் இசை மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், வெற்றிகரமான கூட்டணியாக வலம் வந்த அஜித் - யுவன் கூட்டணியில் 'வலிமை' படத்தின் மூலம் சிக்கல் வந்தது. இனி, அஜித் நடிக்கும் படங்களுக்கு யுவன் இசையமைப்பாரா என்பதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே, விஜய் - யுவன் கூட்டணி மீதான பார்வை ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இன்னும் படப்பிடிப்பே ஆரம்பமாகத நிலையில் இசை உரிமை அதற்குள் விற்பனையாகிவிட்டதா என்று திரையுலகத்திலும் ஆச்சரியப்படுகிறார்கள்.