Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அது எங்க தப்புதான்: விஜய் சேதுபதி ஒப்புதல்

சென்னை: ‘ஏஸ்’ படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தார். தொடர்ந்து நிறைய திரையரங்குகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று சென்னையில் உள்ள திரையரங்கில் திடீர் தியேட்டர் விசிட் அடித்தார். அவருடன் பட இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினரும் வந்திருந்தனர். ரசிகர்களின் வரவேற்பை பார்த்துவிட்டு செய்தியாளர்களை விஜய் சேதுபதி சந்தித்தார்.

அப்போது விஜய் சேதுபதி பேசுகையில், “படம் வெளியாகியிருப்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. அது எங்களுடைய தவறுதான். சில நெருக்கடியால் திடீர்னு படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியம் வந்துவிட்டது. ஒரு படத்தை எடுத்து முடித்தவுடன் மக்களிடம் கொண்டு செல்ல ஒரு நேரம் தேவைப்படுகிறது. ஆனால் நாங்கள் ஒரு வாரம் முன்பு தான் விளம்பர பணிகளை ஆரம்பித்தோம். இருந்தாலும் படத்திற்கு ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் பாசிட்டிவாக இருக்கிறது. அதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. பார்ட் 2, அதற்கான கதை அமைந்தால் எடுப்போம்” என்றார்.