Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கமல்ஹாசனை ஆச்சரியப்பட வைத்த சிறுவன்

சென்னை: ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தை தவிர்த்து இந்தியன் 3 படத்தை அவர் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசியலில் பிசியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கமலிடம் மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்ற சிறுவன் வசனம் பேசி காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. முதலில் கமலிடம் பத்து திருக்குறளை இடைவெளி இல்லாமல் சொல்லும் அந்த சிறுவன், அடுத்ததாக சிவாஜி பேசிய பிரபல வசனமான ‘வீர பாண்டிய கட்ட பொம்மன்’ படத்தின் வசனத்தை பேசி காண்பிக்கிறார்.

இடையில் அச்சிறுவன் சில வரிகளை தவறவிட சிறுவனுக்கு கமல் எடுத்து சொல்லி மகிழ்ந்தார். மேலும் சிறுவன் முழு வசனத்தை பேசி முடித்தவுடன் சபாஷ் எனப் பாராட்டினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.