Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குழந்தையே பிறக்காது என்று சொல்லிவிட்டார்கள்: சன்னி லியோன் உருக்கம்

மும்பை: பல்வேறு மொழிகளில் ஹீரோயினாகவும், சிறப்பு தோற்றத்திலும், ஒரு பாடல் காட்சியிலும் நடித்து வந்த சன்னி லியோன், சமீபத்தில் அளித்துள்ள உருக்கமான பேட்டி வருமாறு:

எனது 38வது வயதில் திருமணம் செய்தவுடன் குடும்ப வாழ்க்கையை தொடங்கியபோது, எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டது. சில மாதங்கள் வரை இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்தோம். நான் கர்ப்பமானபோது, ‘வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த வளர்ச்சியும் இல்லை. குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். பிறகு செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற முயற்சிகளை செய்து பார்த்தும் பலன் இல்லை.

கடவுள் எனக்கு குழந்தை பெறும் வாய்ப்பை கொடுக்கவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன். அப்போது, நாம் ஏன் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கக்கூடாது என்ற யோசனை ஏற்பட்டது. நிஷா கவுர் வெபர் ஒரு மகளாக கிடைத்தார். பிறகு ஒரு வாடகைத்தாய் மூலம் நோவா, ஆஷர் ஆகிய இரட்டை ஆண் குழந்தைகள் கிடைத்தார்கள். கடவுள் எங்களை மிகவும் நேசிக்கிறார் என்று இப்போது உணர்ந்து சந்தோஷப்படுகிறேன்.