Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘பழைய சிம்ரனை திரும்ப உருவாக்கிட்டாங்க’

சென்னை: அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் ஹிட்டாகி, வசூலில் சாதனை படைத்த படம், `டூரிஸ்ட் ஃபேமிலி’. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், ‘இப்படம் ஹிட்டானாலும், என் சம்பளத்தை அதிகரிக்க மாட்டேன். பழைய சம்பளம்தான். நான் நடித்ததில் ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப்புலி’ ஆகிய படங்கள் வசூலை அள்ளியது. அந்த சாதனையை `டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் முறியடித்துள்ளது’ என்றார்.

பிறகு சிம்ரன் பேசுகையில், ‘கடந்த 30 வருடங்களாக நடித்து வருகிறேன். ரசிகர்கள் இல்லை என்றால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. இலங்கை தமிழில் எப்படி பேச வேண்டும் என்று சசிகுமார் எனக்கு கற்றுக்கொடுத்தார். 20 வருடங்களுக்கு பிறகு இதுபோன்ற ரோலில் நடித்தது, பழைய சிம்ரனை உருவாக்கியது போல் இருந்தது’ என்றார். அப்போது அவரது கண்கள் கலங்கியது.