தமிழ் ‘ராப்’ சிங்கராக இருப்பவர், ஐக்கி பெர்ரி. ஏராளமான ‘ராப்’ பாடல்களைப் பாடியிருக்கிறார். இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் விஜய் ஆனந்தன் இயக்கும் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தை எஸ்.கே.எம் சினிமாஸ் சார்பில் அகில் தயாரிக்கிறார். வடசென்னை பகுதியை பின்னணியாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாகும் இதற்கு ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’,...
தமிழ் ‘ராப்’ சிங்கராக இருப்பவர், ஐக்கி பெர்ரி. ஏராளமான ‘ராப்’ பாடல்களைப் பாடியிருக்கிறார். இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் விஜய் ஆனந்தன் இயக்கும் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தை எஸ்.கே.எம் சினிமாஸ் சார்பில் அகில் தயாரிக்கிறார். வடசென்னை பகுதியை பின்னணியாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாகும் இதற்கு ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘போத்தனூர் தபால் நிலையம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்திருந்த தென்மா இசை அமைக்கிறார். ஆரி ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது.
ஐக்கி பெர்ரி கூறுகையில், ‘தயாரிப்பாளர் அகில் எனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் சில இசை ஆல்பங்களில் பணியாற்றியுள்ளேன். திரைப்படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு நல்ல ெதாடக்கம். நண்பர் அகில் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் விதமாக இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளார்’ என்றார்.