Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கிரேஸுக்கு தடை விதித்த அம்மா

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்து வெளியான ‘பறந்து போ’ என்ற படத்துக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி, ‘சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று, முதன்முதலில் என் அம்மாவிடம் சொன்னேன். அதற்கு முன்பு இதுபற்றி யாரிடமும் சொன்னது கிடையாது. உடனே அம்மா, ‘சினிமா துறை என்பது நமக்கானது கிடையாது. நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும்’ என்று, என் சினிமா ஆர்வத்துக்கு தடை போட்டார். கலை, நடனம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். படிப்பை விட இதுபோன்ற துறைகளில்தான் அதிக ஆர்வம் இருந்தது.

சினிமா நடிகையாக வேண்டும் என்று சிறுவயதிலேயே முடிவு செய்துவிட்டேன். ராம் சார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானதை நினைத்து எமோஷனலாக இருக்கிறது. சிவாவுடன் சேர்ந்து நடிக்கும்போது, ஒரு நண்பருடன் இருப்பது போல் பாதுகாப்பாகவும், அன்பாகவும் உணர்ந்தேன். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன்’ என்றார். கிரேஸுக்கு சினிமாவில் நடிக்க தடை விதித்த அம்மா, பிறகு மகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு அனுமதி அளித்தார்.