Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கலிபோர்னியாவில் கிடைத்த வரவேற்பு

ரெய்ன் ஆஃப் ஆரோஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்துள்ள படம், ‘பன் பட்டர் ஜாம்’. இப்படத்தை ‘காலங்களில் அவள் வசந்தம்’ ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். ராஜூ ஜெயமோகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். விரைவில் திரைக்கு வரும் இப்படம், அமெரிக்காவின் வட கலிபோர்னியாவில் இருக்கும் ராலேவில், வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 5 ஆயிரம் தமிழர்கள் படத்தை பார்த்து ரசித்தனர். அவர்களை சுரேஷ் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து உரையாடினார். வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA) என்பது, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள தமிழ் அமைப்புகளின் லாப நோக்கமற்ற கூட்டமைப்பாகும்.