Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

8 வருடத்துக்கு முன் சொன்ன கதை படமானது

சென்னை: பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள படம், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. வைபவ், அதுல்யா ரவி, ‘மணிகண்டா’ ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சாம்ஸ், ரெடின் கிங்ஸ்லி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், சூர்யா கணபதி, மறைந்த ஷிஹான் ஹூசைனி நடித்துள்ளனர். டாக்டர் மனோஜ் பெனோ நிர்வாக தயாரிப்பு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா, கருணாகரன், சூப்பர் சுப்பு, ஆஃப்ரோ பாடல்கள் எழுதியுள்ளனர்.

டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 20ம் தேதி ரிலீசாகும் இப்படம் குறித்து வைபவ் பேசுகையில், ‘இது ஒரு கலகலப்பான படம். விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் ஆகியோர் சிறப்பாக உருவாக்கியுள்ளனர்’ என்றார். அதுல்யா ரவி பேசும்போது, ‘முழுநீள நகைச்சுவை படமான இதில் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது’ என்றார். விக்ரம் ராஜேஷ்வர் பேசுகையில், ‘சுமார் 8 வருடங்களுக்கு முன்பு இக்கதையை மனோஜ் பெனோவிடம் சொன்னேன். என்மீது நம்பிக்கை வைத்து தயாரித்துள்ளார்’ என்றார்.