துபாய்: சம்கோ மற்றும் எல்.சி. மீடியா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இரண்டாவது குறும்படமான “தீரா” எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா, கடந்த ஜூன் 28ஆம் தேதி (சனி), மாலை 7:30 மணிக்கு, துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல முக்கியமான விருந்தினர்கள் மற்றும் சமூக சேவகர்கள்...
துபாய்: சம்கோ மற்றும் எல்.சி. மீடியா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இரண்டாவது குறும்படமான “தீரா” எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா, கடந்த ஜூன் 28ஆம் தேதி (சனி), மாலை 7:30 மணிக்கு, துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல முக்கியமான விருந்தினர்கள் மற்றும் சமூக சேவகர்கள் கலந்து கொண்டு, இளைஞர்களின் படைப்பாற்றலை பாராட்டினர்.
சிறப்பு விருந்தினர்கள்:
ஹமீது யாசின் – வோல்வோ பென்ஸ் ,ஷா – முத்தமிழ் சங்கம்,பால் பிரபாகர் – TEPA,ஷீலா – அமீரக தமிழ் சங்கம்,ராபின்சன் – RUKN குழுமம்,கபீர் – துபை தர்பார்,நசீர் – துபை மைந்தன்,நாசர் – பச்சை மண் பாசறை,மன்னை சுரேஷ் – இன்ஃபுளென்சர்,ரஷித் – R மீடியா,முத்துமணி – இன்ஃபுளென்சர்
திரைக்கதை, வசனம், பின்னணி இசை, இயக்குனர்: சமீர் அகமத்,கதையம்: ஹமீது யாசின்,ஒளிப்பதிவாளர்: அஸ்கர் ஷா,முன்னணி நடிகர்: ரிஜாய் ,முன்னணி நடிகை: கஸ்தூரி ராஜேஷ்,துணை நடிகர்கள்: நிஜாம், நாசர், ஜலால், ஃபாரிஸ், அறபாத் இசை: Suno.ai தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. ஆல்ட்ரின், இம்தாதுல்லா, ஹமீது, காதர், பீமா, கஸ்தூரி மற்றும் குடும்பத்தினர் – இவர்களின் பின்னணி ஆதரவு இந்நிகழ்வை சிறப்பிக்க உதவியது.
இந்நிகழ்வின் வாயிலாக துபை தமிழர்கள் மத்தியில் ஒரு புதிய படைப்பாளி குழுவாக சம்கோ மற்றும் எல்சி மீடியா புரொடக்ஷன் தங்களை வலியுறுத்தியிருக்கின்றனர். “தீரா” குறும்படம் விரைவில் பொது மக்களுக்கு வெளியிடப்பட இருக்கிறது.