சென்னை: திரையுலகில் சமீபகாலமாக விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகையும் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ள முடிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீரா வாசுதேவன். இவர் தற்போது மூன்றாவது முறையாக விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன், விஷால் அகர்வால் என்பவரை முதலில் 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2008ல் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பின்னர் நடிகர் ஜான் கொக்கேனை 2012ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரையும் 2016ம் ஆண்டு பிரிந்தார்.
இதையடுத்து டிவி தொடர் ஒளிப்பதிவாளரான விபின் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிந்துள்ளதாக தற்போது மீரா அறிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள், ‘உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவதை பார்க்கும்போது அதிர்ச்சியும் சோகமும் ஏற்படுகிறது’ என கருத்து தெரிவித்துள்ளனர்.
