சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் 99வது படம், ‘மகுடம்’. இதில் விஷால் நடித்து வருகிறார். இது அவர் நடிக்கும் 35வது படமாகும். அதர்வா முரளி நடித்த ‘ஈட்டி’, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ரவி அரசு இயக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் ஹீரோயினாக நடிக்கிறார். அஞ்சலி, யோகி பாபு முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், துஷாரா விஜயன் காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
விஷால் உள்பட மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட வேண்டும். முன்னதாக தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’, ரஜினிகாந்துடன் ‘வேட்டையன்’, விக்ரம் ஜோடியாக ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த துஷாரா விஜயன், அடுத்தடுத்து தமிழில் நடிக்க புதிய கதைகளை கேட்டு வருகிறார். அதோடு, திடீரென்று தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார்.