Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்

விஷால் நடிக்கும் 35வது படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ரவி அரசு இயக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதன் பூஜை விழாவில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விஷால் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான ‘மதகஜராஜா’ 13 ஆண்டுகள் கழித்து ரிலீசானாலும் வசூலை வாரிக் குவித்தது. இதனைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கான கதை தேர்வு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அதர்வா முரளி நடிப்பில் வெளியான ‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு எழுதியுள்ள கதையை விஷால் தேர்வு செய்துள்ளார். இதை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். துஷாரா விஜயன் இதற்கு முன்பாக தனுஷுடன் ‘ராயன்’, ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்’ மற்றும் விக்ரம் ஜோடியாக ‘வீர தீர சூரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது பாராட்டுகளை பெற்றார். இந்த நிலையில் அவர் அடுத்த படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இப்படம் விஷாலின் 35வது படமாகவும், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99வது படமாகவும் உருவாகிறது. இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 45 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.