Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

3 காலகட்ட கதை ஆரோமலே

சென்னை: ‘முதல் நீ முடிவும் நீ’, ‘சிங்க்’, ‘தருணம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள கிஷன் தாஸ், ‘டிராகன்’ ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர், விடிவி கணேஷ், மேகா ஆகாஷ், சந்தானபாரதி நடித்துள்ள படம், ‘ஆரோமலே’. மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ளார். சாரங் தியாகு இயக்க, சித்து குமார் இசை அமைத்துள்ளார். நாளை திரைக்கு வரும் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் குறித்து சாரங் தியாகு கூறியதாவது:  கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனரான நான் இயக்கியுள்ள முதல் படம் இது.

கிஷன் தாஸை மனதில் நினைத்து கதை எழுதினேன். பள்ளி மற்றும் கல்லூரி மாணவன், பிறகு இளைஞன் என்று 3 காலக்கட்டங்களில் கதை நடக்கிறது. சினிமா வசனம் பேசி கிஷன் தாஸ் காதலிப்பார். ஷிவாத்மிகா அதிகமாக சம்பாதித்து, பொறுப்பாக இருப்பவரை காதலிக்க நினைப்பார். இருவருக்கும் காதல் மலர்ந்தால் எப்படி இருக்கும் என்பது திரைக்கதை. படம் பார்த்த பிறகு காதல் என்றால் என்ன என்ற புரிதல் ஏற்படும்.

முன்னதாக படத்தை பார்த்த சிம்பு, சில மாற்றங்களை சொன்னார். படப்பிடிப்பு முடிந்திருந்தாலும், அவர் சொன்ன மாற்றங்களை மீண்டும் படமாக்கினோம். அதை பார்த்துவிட்டு எங்களை பாராட்டினார். அவரது தந்தை டி.ராஜேந்தர், தாயார் உஷா ஆகியோரையும் படத்தை பார்க்க வைத்தார். அவர்களும் எங்களை பாராட்டினர். படப்பிடிப்பு நடந்தபோது கிஷன் தாசுக்கு திருமணம் நடந்தது. ஆனால், அவர் தனது ஹனிமூன் பயணத்தை மாற்றிக்கொண்டு நடித்து முடித்தார்.