லாஸ் ஏஞ்சல்ஸ்: அகாடமி விருதுகள் என்ற ஆஸ்கர் விருது விழாவில், உலகம் முழுவதும் வெளியான மிகச்சிறந்த படைப்புகள் மற்றும் சிறந்த கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக பல பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் மிகப்...
லாஸ் ஏஞ்சல்ஸ்: அகாடமி விருதுகள் என்ற ஆஸ்கர் விருது விழாவில், உலகம் முழுவதும் வெளியான மிகச்சிறந்த படைப்புகள் மற்றும் சிறந்த கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக பல பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் மிகப் பிரமாண்டமாக நடக்கிறது. அந்தவகையில் இவ்விழா, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 முதல் 8.30 மணி வரை நடக்கிறது. இவ்விழாவை ஜியோ ஹாட் ஸ்டார், ஸ்டார் மூவிஸ் ஆகியவற்றில் பார்க்கலாம்.
விருதுக்கான பட்டியலில் 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ள ‘எமிலியா பெரெஸ்’ என்ற ஸ்பானிஷ் படம், ஆங்கில மொழி அல்லாத படங்களில், அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட படம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதில் நடித்துள்ள கார்லா சோஃபியா காஸ்கான், ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகும் முதல் திருநங்கை ஆவார். ‘தி புரூட்டலிஸ்ட்’ என்ற ஆங்கிலப் படம் 11 பிரிவுகளிலும், ‘விக்கெட்’ என்ற படம் 10 பிரிவுகளிலும் மற்றும் ‘கான்கிளேவ்’, ‘எ கம்ப்ளீட் அன்னவுன்’ ஆகிய படங்கள் 9 பிரிவுகளிலும் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றன.
‘எமிலியா பெரெஸ்’, ‘விக்கெட்’, ‘டியூன் 2ம் பாகம்’, ‘தி புரூட்டலிஸ்ட்’ ஆகிய படங்கள், சிறந்த திரைப்படம், இயக்கம், நடிகர், நடிகை ஆகிய பிரிவுகளில் தேர்வானதால், இப்படங்களுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தியா சார்பில் பிரியங்கா சோப்ரா, குனீத் மோங்கா இணைந்து தயாரித்துள்ள `அனுஜா’ என்ற ஒரு குறும்படம், சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) என்ற பிரிவில் தேர்வானது குறிப்பிடத்தக்கது.