சென்னை: ‘டாக்சிக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சிறிய டீஸர் மட்டுமே படத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை இரண்டு...
சென்னை: ‘டாக்சிக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சிறிய டீஸர் மட்டுமே படத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை இரண்டு கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும், விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘டாக்சிக்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தினை ஹாலிவுட்டில் வெளியிட முன்னணி ஸ்டூடியோக்களிடம் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.