தற்போது சிம்புவுக்கு 42 வயதாகிறது என்றாலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறார். அவருக்கு மணப்பெண் தேடும் படலமும் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டி.ராஜேந்தர், ‘நானும் சக மனிதன்தான். எனக்கும் இதயம் இருக்கிறது. மனைவியை விரும்புவது மட்டுமல்ல, நமது பிள்ளைகளை நேசிப்பதும் காதல்தான், பாசம்தான். சிம்புவின் திருமணம் குறித்து மற்றவர்கள் என்னிடம் கேட்கும்போது, அது என் மனதை காயப்படுத்தவே செய்கிறது. என் மகனை உயிருக்குயிராக நேசிக்கக்கூடிய ஒரு பெண்ணை கடவுள் கொடுக்க வேண்டும்.
என் மகனிடம் சென்று, ‘நீ திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறாயா?’ என்று கேட்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் கடவுளிடம் மட்டும்தான் கேட்பேன். நானும், என் மனைவி உஷாவும் வற்புறுத்தி கேட்டால், சிம்பு எங்கள் பேச்சை மறுக்க மாட்டான். ஆனால் நானோ, என் மனைவியோ அவனை வற்புறுத்த மாட்டோம்’ என்றார். தற்போது டி.ஆர். புதுமுகங்களை வைத்து இயக்கும் படத்துக்கான செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.