Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திரிப்தி டிம்ரி படப்பிடிப்பு ஒத்திவைப்பு

கடும் சர்ச்சைக்குள்ளாகி ஹிட்டாகி வசூலை குவித்த ‘அர்ஜூன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களை இயக்கியவர், சந்தீப் ரெட்டி வங்கா. அவரது இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ என்ற இந்தி படத்தில் நடிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பிரபாஸ் ஒப்பந்தமாகி, பல கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ல் தொடங்கும் என்று அப்போது அறிவித்திருந்தனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘சலார்’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் பிரபாஸ் பிசியாக நடித்து வந்ததால், ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை வரும் 2026 மார்ச் மாதம் தொடங்குவதாக சந்தீப் ரெட்டி வங்கா அறிவித்துள்ளார். தற்போது ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள பிரபாஸ், அடுத்து ‘பவுஜி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில மாதங்களில் இப்படத்தை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு மார்ச்சில் இருந்து ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இதில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்க மறுத்து விலகிய நிலையில், ‘அனிமல்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த திரிப்தி டிம்ரி ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.