சென்னை: டாம்ஸ் கன்சல்டன்சி (Tam’s Consultancy) நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க, தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பது தான்...
சென்னை: டாம்ஸ் கன்சல்டன்சி (Tam’s Consultancy) நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க, தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பது தான் இந்தக்கதையின் மையம். நட்டி நடிப்பில் ‘போங்கு’ படத்தை இயக்கிய தாஜ் இயக்கும் இரண்டாவது படம் இது. எழுதி, இயக்குகிறார். தமிழ்வாணன் ஜோடியாக சாய் பிரியா நடிக்கிறார். படத்தில் மேலும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். இசை - எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட். ஒளிப்பதிவு - விஜய் எஸ் குமரன்.