Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எனை சுடும் பனியில் உண்மை சம்பவம்

சென்னை: ‘எனை சுடும் பனி’ திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் நட்ராஜ் சுந்தர்ராஜ் கதாநாயகனாகவும், உபாசனா ஆர்.சி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம்புலி, கூல் சுரேஷ், தானீஷ், சுந்தர்ராஜ் , பில்லி முரளி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. எஸ்.என்.எஸ். பிக்சர்ஸ் சார்பில் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்துள்ளார். சாண்டி மாஸ்டர் ஒரு பாடலுக்கு நடனமாடியதோடு, நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதி, ராம் சேவா இயக்கியுள்ளார். அருள் தேவ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு வெங்கடேஷ். வரும் 21ம் தேதி ரிலீசாகிறது.