Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உண்மை சம்பவம் ஐயம்

சென்னை: இலங்கையில் இருந்து வாழ்வாதாரம் தேடி வரும் ஒரு குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு காணும் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படம், ‘ஐயம்’. செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் ஈஸ்வரன் விஜயன் தயாரிக்க, ந.வசந்த் எழுதி இயக்குகிறார்.

ஹீரோவாக பாலாஜி, ஹீரோயினாக ரெய்னா கரட், முக்கிய வேடங்களில் போஸ் வெங்கட், கானா உலகநாதன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், தீபா சங்கர், கேபிஒய் வினோத், மிப்பு, ரஞ்சன், விஜய் கணேஷ், கிரேன் மனோகர், யாசர், சுப்பிரமணி, விஜயலட்சுமி நடிக்கின்றனர்.

கமலக்கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் இசை அமைப்பில் கானா உலகநாதன், லிகரன், ந.வசந்த் பாடல்கள் எழுதுகின்றனர். சயான் எடிட்டிங் செய்கிறார். நாக் அவுட் நந்தா சண்டைப் பயிற்சி அளிக்கிறார். வேலு அரங்கம் அமைக்கிறார். இறுதிக்கட்ட ஷூட்டிங் நடக்கிறது.