தமிழில் ‘எஸ்டிஆர் 49’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் குறித்து வெற்றிமாறன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘இப்படத்தின் கதையை சுமார் 1 மணி நேரம், 15 நிமிடங்கள் வரை எழுதி முடித்திருக்கிறேன். இன்னும் ஒரு எபிசோடே முடியவில்லை. மொத்தம் 5 எபிசோடுகள் இருக்கின்றன. நான் என்ன செய்யப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை.
அனேகமாக இப்படம் 2 பாகங்களாக வெளியாகும்’ என்றார். ‘எஸ்டிஆர் 49’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை 2’ என்ற படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இதை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தனுஷ் தயாரிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவாக்கப்படும் சிம்பு, தனுஷ் ஆகியோரின் படங்கள் வடசென்னையை கதைக்களமாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.