ஐதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா திருமணம் நடைபெறும் இடம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்தி திரையுலகிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.சமூக வலைதளங்களிலும் ராஷ்மிகா ஆக்டிவ்வாக இருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ராஷ்மிகாவும், விஜய் தேவர கொண்டாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மும்முரமாக கவனித்து வருகிறார்களாம். ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் திருமணம் பிப்ரவரி மாதம் உதய்ப்பூர் அரண்மனையில் வைத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக மணமக்களின் வீட்டார் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+
