Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உக்ரம் (தெலுங்கு) - திரை விமர்சனம்

டெரர் போலீஸ் அதிகாரி அல்லரி நரேஷ், தனது மனைவி மிர்னா மேனன் மற்றும் மகளுடன் காரில் வரும்போது, திடீரென்று அந்த கார் விபத்துக்குள்ளாகிறது. பிறகு தனது மனைவி, மகளை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் செல்கிறார். அங்கு அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கிறார். மறுநாள் அவரது மனைவியும், மகளும் ஆஸ்பத்திரியில் இல்லை. காரணம், விபத்தில் அல்லரி நரேஷின் மூளை சேதமடைந்து, அவர் ‘டிமென்சியா’ என்ற பிரச்னையில் சிக்குகிறார். நடக்காத ஒன்றை நடந்தது போல் நினைப்பதுதான் இந்த நோய். அப்படி என்றால், நிஜத்தில் அவரது மனைவியும், மகளும் எங்கே என்பதற்கு பதில் சொல்கிறது படம். வழக்கமான போலீஸ் கதை என்றாலும், அதற்குள் ‘டிமென்சியா’ என்ற புது விஷயத்தை இணைத்து அதிரடி ஆக்‌ஷன் கதையாக, மாஸ் எண்டர்டெயின்மெண்டாக ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் விஜய் கனகமேடலா.

அல்லரி நரேஷ் வழக்கம்போல் ஆக்‌ஷனில் அதகளம் செய்திருக்கிறார். கூடவே ‘டிமென்சியா’ இருப்பதால், நன்றாக நடிக்கவும் வாய்ப்பு. வில்லன் அவரை சரமாரியாக கத்தியால் குத்திக்கிழித்த பிறகு கூட, 50 பேரை பொளந்து தள்ளுகிறார். அவர் செய்யும் அத்தனை என்கவுண்டருக்கும் எந்தக் கேள்வியும் இல்லை. மிர்னா மேனன் எல்லா காட்சியிலும் ஃபுல் மேக்கப்பில் ஆஜராகிறார். ஓரளவு நடிக்கவும் செய்கிறார். ஏற்கனவே இவர் தமிழிலும், மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். செயற்கை ரத்தம் தயாரிக்கும் வில்லன், திருநங்கைகள் வேடத்தில் ஆட்களைக் கடத்தும் கும்பல், அனாதை இல்ல சிறுமிகளை நாசம் செய்யும் போதை கும்பல் என்று பல விஷயங்களை படத்தில் வைத்து, அதை மெயின் கதையுடன் இணைத்துள்ளனர். லாஜிக் பற்றி கவலைப்படாவிட்டால், இரண்டரை மணி நேரம் டைம் பாஸாகும். கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இப்படம், தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.