கோவா 56வது சர்வதேச திரைப்பட விழாவில், ‘வேவ்ஸ் பிலிம் பஜார்’ என்ற பிரிவில், சிறந்த திரைப்படத்துக்கான அடையாள விருதை ‘ஆக்காட்டி’ என்ற படம் பெற்றுள்ளது. இதன் இயக்குனர் ஜெய்லட்சுமி, இணை தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், காஸ்டிங் இயக்குனர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு இவ்விருதை பெற்றனர்.
தென்தமிழக கிராமங்களில் காணப்படும் தாய்மாமன் சீர்வரிசை முறையை மையப்படுத்தி உருவான இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனிதர்களிடையே ஏற்படும் சிக்கல்களையும் அழுத்தமாக பதிவு செய்கிறது. ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி, முல்லையரசி, சுபாஷ் நடித்துள்ளனர். எஸ்.ஈ.எசக்கி ராஜா ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். ராம் குமார் எடிட்டிங் செய்ய, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார்.
