Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வானரன்: விமர்சனம்

பகல் வேஷம் என்ற பாரம்பரிய கலையைப் பின்தொடரும் பிஜேஷ் நாகேஷ், ஆஞ்சநேயர் வேடம் அணிந்து, வீதி வீதியாகச் சென்று காணிக்கை பெற்று வாழ்க்கை நடத்துகிறார். அவரது மகளுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு, அதை ஆபரேஷன் மூலம் நீக்க 4 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. மகளைக் காப்பாற்ற துடிக்கும் பிஜேஷ் நாகேஷ் என்ன செய்தார் என்பது, நெஞ்சை கனக்க வைக்கும் மீதி கதை. ஹனுமந்த ராவ் என்ற வெள்ளந்தி மனிதராகவே வாழ்ந்திருக்கிறார், பிஜேஷ் நாகேஷ். தனது தாத்தா நாகேஷ், தந்தை ஆனந்த் பாபுவின் சாயல் இல்லாமல் இயல்பாக நடித்து கண்கலங்க வைத்துள்ளார்.

அக்‌ஷயாவுக்கு அதிக வேலை இல்லை. மகளாக நடித்த பேபி வர்ஷினி, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் நடிப்பில் அசத்தியுள்ளார். ஆதேஷ் பாலா, ஜீவா தங்கவேல், நாமக்கல் விஜயகாந்த் குமார், ஜூனியர் டி.ஆர், தீபா சங்கர், நாஞ்சில் விஜயன், வெடிக்கண்ணன், எஸ்.எல்.பாலாஜி, வெங்கட் ராஜ், சிவகுரு, ராம்ராஜ் ஆகியோரும் கவனத்தை ஈர்த்துள்ளனர். நிரன் சந்தர் ஒளிப்பதிவு தெளிவு. ஷாஜகான் இசை, சிறப்பு. கடவுள் வேடம் அணிந்தவர்களின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து, ‘டூ’ ஸ்ரீராம் பத்மநாபன் சிறப்பாக எழுதி இயக்கியுள்ளார்.