Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வடிவேலு, பஹத் பாசில் நடிக்கும் மாரீசன்: வரும் 25ம் தேதி ரிலீசாகிறது

சென்னை: சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள படம், ‘மாரீசன்’. இதில் வடிவேலு, பஹத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், ரேணுகா, லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்ய, மகேந்திரன் அரங்குகள் அமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில், டிராவலிங் திரில்லர் படமாக உருவான இதை சூப்பர் குட் பிலிம்சுக்காக ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். E4 எக்ஸ்பரிமெண்ட்ஸ் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளது. இந்நிலையில், வரும் 25ம் தேதி படம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘மாமன்னன்’ படத்துக்கு பிறகு வடிவேலு, பஹத் பாசில் கூட்டணி இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.