சென்னை: வள்ளலார் தினத்தையொட்டி நாளை பிரபல இசையமைப்பாளர் சி. சத்யா தலைமையிலான Sound of Sanmarga இசைக்குழுவின் சிறப்பு இசை நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது. எங்கேயும் எப்போதும், பொன்மாலைப் பொழுது, தீயா வேலை செய்யணும் குமாரு, நெடுஞ்சாலை, காஞ்சனா-2, ஒத்த செருப்பு, அரண்மனை-3, கேங்கர்ஸ் உட்பட ஏராளமான திரைப்படங்களுக்கு சத்யா இசையமைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் தான் இசையமைத்த வள்ளலார் பாடல்களை இசையமைப்பாளர் சி. சத்யா வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி பங்கேற்கிறார். ஆட்டிசம் சைல்ட்பாடகி மானஸி வள்ளலார் பாடலை மழலை குரலில் பாடி அரங்கேற்றம் செய்கிறார்.