Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வனிதாவாக மாறிய அஞ்சலி

தமிழில் வெளியான ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ ஆகிய படங்களை எழுதி இயக்கிய ராம், சில படங்களில் நடித்தார். தற்போது அவர் எழுதி இயக்கியுள்ள ‘பறந்து போ’ படம், வரும் ஜூலை 4ம் தேதி திரைக்கு வருகிறது. மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ், மாஸ்டர் மிதுன் ரியான், விஜய் யேசுதாஸ் நடித்துள்ளனர். படம் குறித்து ராம் கூறுகையில், ‘சிவா ஒரு சிறந்த நடிகர் என்பதை இப்படம் நிரூபிக்கும். யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்து ஒரு பாடலை பாடியிருக்கிறார். மற்ற பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார்.

சிறப்பு தோற்றத்தில் அஞ்சலி நடித்துள்ளார். யதார்த்த வாழ்க்கையை சொல்லியிருக்கிறேன். திரைப்படங்களில் சுவாரஸ்யத்தை தாண்டி வாழ்க்கையின் யதார்த்தங்களை சொன்னால், மக்கள் ஏற்றுக்கொண்டு ஆதரவு கொடுக்கின்றனர். நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் நான் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் திரைக்கு வந்த பிறகு ஒரு நல்ல காமெடி கதை கிடைத்தால் மீண்டும் நான் நடிப்பேன். குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது, அவர்களுடன் சிறிதளவு நேரத்தை செலவிட வேண்டும் என்பது மட்டுமே.

பெற்றோர்கள் அதை செய்ய வேண்டும். கொரோனா லாக்டவுன் நேரத்தில், எனது குடியிருப்பில் இருந்த குழந்தைகளை கவனித்தேன். அதன் எதிரொலியாகவே ‘பறந்து போ’ உருவாகியுள்ளது’ என்றார். அஞ்சலி கூறும்போது, ‘இதில் நான் ஏற்றுள்ள வனிதா என்ற கதாபாத்திரம், கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும். ராம் சார் ஸ்டைலில் கமர்ஷியல் கேரக்டர் வந்தால் எப்படி இருக்கும் என்பதே இதில் நான் நடித்துள்ள கேரக்டராகும்’ என்றார்.