Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மகன் பெயரை அறிவித்த வருண் தேஜ்

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர், வருண் தேஜ். ‘முகுந்தா’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர், பிறகு ‘காஞ்சே’, ‘லோஃபர்’, ‘மிஸ்டர்’, ‘ஃபிடா’, ‘தொலி பிரேமா’, ‘காணி’, ‘ஆபரேஷன் வாலன்டைன்’, ‘மட்கா’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இந்நிலையில், ‘மிஸ்டர்’, ‘அந்தரிக்ஷம் 9000 கேஎம்பிஎச்’ ஆகிய படங்களில் தனக்கு ஜோடியாக நடித்த லாவண்யா திரிபாதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்களது திருமணம் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இத்தாலியில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. அவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. விஜயதசமி நாளன்று தங்கள் மகனின் பெயரை உலகிற்கு தெரிவித்துள்ளனர். அதன்படி, தங்கள் மகனுக்கு ‘வாயு தேஜ் கொனிடேலா’ என்று பெயரிட்டுள்ளனர். தற்போது வருண் தேஜ், யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த லாவண்யா திரிபாதி, தற்போது ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நடிக்கிறார்.

மேலும், தமிழில் அதர்வா முரளியுடன் அவர் நடித்த ‘தணல்’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக சசிகுமாருடன் ‘பிரம்மன்’, சந்தீப் கிஷனுடன் ‘மாயவன்’ ஆகிய தமிழ் படங்களில் அவர் நடித்திருந்தார்.