Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘வேதாளம்’ வில்லன் கபீர் துஹான் திருமணம்

மும்பை: தெலுங்கில் ‘ஜில்’ என்ற படத்தில் வில்லனாக அறிமுகமான வர், ஹரியானாவை சேர்ந்த கபீர் துஹான் சிங் (37). அஜித் குமார் நடித்த ‘வேதாளம்’ படத்தின் மூலமாக தமிழுக்கு வந்தார். பிறகு ‘றெக்க’, ‘காஞ்சனா 3’, ‘அருவம்’, ‘ஆக்‌ஷன்’, ‘தெற்கத்தி வீரன்’ உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். தற்போது இந்தியில் நடித்து வருகிறார். கபீர் துஹான் சிங்கிற்கும், ஹரியானாவை சேர்ந்த அவரது நீண்ட நாள் தோழியான கணித ஆசிரியை சீமா சாஹலுக்கும் டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இதில் இருவீட்டு உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, மனைவியை அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ள கபீர் துஹான் சிங், ‘இது காதல் திருமணம் இல்லை. எனது பெற்றோர் பார்த்து முடிவு செய்த திருமணம்’ என்று ெதரிவித்துள்ளார்.