திரையுலகில் இளம் முன்னணி நடிகராக இருக்கும் கண்ணா ரவிக்கு ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பயோபிக் கதை வருகிறது. முதலில் இப்படத்தின் ஷூட்டிங் ஒரு படமாகவே நகர்கிறது. ஆனால் , திடீரென்று இப்படத்தின் கிளைமாக்சில், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட மறுத்த கண்ணா ரவி, திடீரென்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறுகிறார். அவர் வெளியேற என்ன காரணம்? பயோபிக் கிளைமாக்சில், உண்மையில் என்ன நடந்தது என்பது மீதி கதை. ஒரு முன்னணி ஹீரோவுக்கான மேனரிசங்களை அற்புதமாக வெளிப்படுத்தி நடித்து, அந்த கேரக்டருக்கு வலு சேர்த்துள்ள கண்ணா ரவிக்கு திரையுலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. சஞ்சீவ் வெங்கட் வில்லனா? ஹீரோவா என்று சந்தேகப்படும் அளவுக்கு கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கண்ணா ரவியின் மனைவி லாவண்யா, முன்னாள் காதலி வினுஷா தேவி ஆகியோர் இயல்பான நடிப்பை தந்துள்ளனர். விபின் பாஸ்கரின் பின்னணி இசையும், சீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. இந்த வெப்தொடரை பவன் குமார் நேர்த்தியாக எழுதி இயக்கியுள்ளார். பரபரப்பான இந்த வெப்தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று முதல் பார்க்கலாம்.
+