Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மூத்த நடிகை பெருமாயி மாரடைப்பால் மரணம்

மதுரை: பாரதிராஜா இயக்கிய ‘தெக்கித்திப் பொண்ணு’ என்ற டி.வி தொடர் மூலம் பிரபலமானவர், பெருமாயி (73). மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த அன்னம்பாரிபட்டியை சேர்ந்த அவர், நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

சிவகார்த்திகேயனின் ‘மனம் கொத்திப் பறவை’, விஜய்யின் ‘வில்லு’, பசுபதியின் ‘தண்டட்டி’ உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள அவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்தது, ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருமாயிக்கு 1 மகன், 3 மகள்கள் இருக்கின்றனர்.