Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வெற்றி மாறனின் பேட் கேர்ள் படத்துக்கு புதிய சிக்கல்

சென்னை: இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கத்தில் அஞ்சலி, சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பேட் கேர்ள்’. அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இதனைத் தயாரித்துள்ளனர்.

படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக ஒரு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தற்போது புதிய சர்ச்சையில் இப்படம் சிக்கியுள்ளது. சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராம்குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், டீசரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும், இது பாலியல் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி, தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிமன்றம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.