Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வீடியோ கேமில் சாதித்த சமீரா ரெட்டி

தனது சொந்த வீடியோ கேமில் முதன்மை கதாபாத்திரமாக தோன்றிய முதல் இந்திய நடிகை என்ற பெருமையை சமீரா ரெட்டி பெற்றுள்ளார். அவரது திரைப்பயணத்தை தொடர்ந்து, ஒரு வீடியோ கேமில் முக்கிய கதாபாத்திரமாக தோன்றியது அவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தை கொடுத்தது. 2006ல் வெளியான ‘சமீரா: வாரியர் பிரின்ஸஸ்’ என்ற வீடியோ கேம், அவரை மையப்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீள வீடியோ கேம் ஆகும். இதில் அவரது கதாபாத்திரம் வீரமங்கையாக சித்தரிக்கப்பட்டு சாகசம், ஆக்‌ஷன் நிறைந்த களத்தில் இடம்பெற்றது.

மொபைல் மற்றும் பிற கேமிங் தளங்களில் வெளியான இது, இளைஞர்களிடம் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து சமீரா ரெட்டி கூறுகையில், ‘எனது கதாபாத்திரத்தை ஒரு வீடியோ கேமில் பார்ப்பது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தியாவில் இதுபோன்ற புதுமையான முயற்சியில் பங்கேற்றது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது’ என்றார். எப்போதோ உருவான அந்த வீடியோ, தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.