Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

லிப் டு லிப் தர வந்த ஹீரோ தடுத்தார் வித்யா பாலன்

மும்பை: லிப் டு லிப் கிஸ் தர வந்த ஹீரோவை தடுத்து நிறுத்தினார் வித்யா பாலன். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வித்யா பாலன். தமிழில் அஜித் ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் வித்யா பாலன் பேசும்போது, “ஒரு படத்தில் ஹீரோவுடன் மிக நெருக்கமான முத்தக் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. அது லிப் டு லிப் காட்சி. அந்த காட்சியை படமாக்குவதற்கு சற்று நேரம் முன்பாக தான் அந்த ஹீரோ சைனீஸ் உணவு வகைகளை கட்டு கட்டு என கட்டினார்.

சாப்பிட்டவுடன் கொஞ்ச நேரத்திலேயே அந்த காட்சியில் அவர் நடிக்க வந்தபோது அந்த உணவு வாடை அப்படியே இருந்தது. அவரிடம் நீங்கள் பிரஷ் பண்ணவில்லையா என்று கேட்டதற்கு, எதற்காக? என்று திருப்பி கேட்டார். உடனே அவரிடம் உங்களுக்கு பார்ட்னர் என யாராவது இருக்கிறாரா என்று கேட்டேன். அதன்பிறகு தான் அந்த நடிகர் புரிந்துகொண்டு சென்று பிரஷ் பண்ணி விட்டு வந்து நடித்தார்” என்கிற ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் வித்யா பாலன்.