சென்னை, நவ.26: கலைப்புலி தாணு தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம் ‘அரசன்’. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். படத்தின் நாயகியாக இருவர் பரிசீலனையில் உள்ளனர். ஒருவர் ஆண்ட்ரியா, இன்னொருவர் சாய் பல்லவியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஹீரோயின் காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர். இது தவிர, பான் இந்தியா வில்லன் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் `மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது’ எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இணைந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடிக்க உள்ளார். இதற்கு முன் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
