Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆஸ்பத்திரியில் விஜய் தேவரகொண்டா திடீர் அட்மிட்

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் டெங்கு காய்ச்சல் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் தேவர கொண்டாவுக்கு டெங்கு காய்ச்சல் என்ற தகவல் இணயத்தில் தீயாக பரவி வருகிறது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் விரைவில் வெளியாகும் ‘கிங்டம்’ திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கூறப்படுகிறது. மருத்துவர்கள் விஜய் தேவரகொண்டாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், டெங்கு காய்ச்சலால் அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துள்ளது. இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.