Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விஜய்யை ஜோக்கர் என விமர்சித்து ஸ்ருதி ஹாசன் கடும் தாக்கு: சோஷியல் மீடியாவில் குவியும் ஆதரவு

சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை ஜோக்கர் என கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசனின் இன்ஸ்டா ஸ்டோரியை பலரும் ஷேர் செய்து அவருக்கு இருக்கும் பொறுப்பை பாராட்டுவதாக தெரிவித்துள்ளனர். அந்த ஸ்டோரியில் ஸ்ருதி ஹாசன் கூறியிருந்ததாவது: ஒரு ஜோக்கர் ஜோக்கராக நடந்து கொண்டதற்காக அவரை குறை சொல்லக் கூடாது.

சர்கஸுக்கு போனதற்காக உங்களை தான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விஜய் கரூருக்கு போனதை தான் ஸ்ருதி இப்படி விளாசியிருக்கிறார் என்கிறார்கள் ஸ்ருதி ஹாசனின் ரசிகர்கள். அந்த ஜோக்கர் விஜய், சர்கஸ் தான் கரூரில் நடந்த கூட்டம் என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள். இந்த ஸ்டோரியை அவர் நேற்று வெளியிட்டதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதுவும் ரத்தத்தில் இந்த வாசகம் எழுதியதுபோல் அவர் வடிவமைத்து ஆங்கிலத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பு நிலவியது. சில முன்னணி நடிகர், நடிகைகள் இந்த சம்பவத்தில் நேரடியாக விஜய்யை விமர்சிக்க தயங்கும் நேரத்தில் ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் உண்மையை பேசியிருக்கிறார் என நெட்டிசன்கள் பலரும் சோஷியல் மீடியாவில் ஸ்ருதியை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.