பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள ‘தலைவன் தலைவி’ என்ற படம், வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், ‘மலையாளத்தில் உருவான ‘19(1)(a)’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தேன். அப்போது நித்யா மேனன் எனக்கு அறிமுகமானார். இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற நினைத்தோம். அது இப்படத்தில் நடந்துள்ளதை நினைத்து...
பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள ‘தலைவன் தலைவி’ என்ற படம், வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், ‘மலையாளத்தில் உருவான ‘19(1)(a)’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தேன். அப்போது நித்யா மேனன் எனக்கு அறிமுகமானார். இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற நினைத்தோம். அது இப்படத்தில் நடந்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நடித்த எந்த கேரக்டரிலும், அவரை தவிர வேறொருவரை கற்பனை செய்து பார்க்க முடியாது. சும்மா வந்தோம், நடித்தோம் என்றில்லாமல், எல்லாவிதமான தேவைகளையும் புரிந்துகொண்டு நடிக்கக்கூடிய ஒருவர் நித்யா மேனன்.
பாண்டிராஜூடன் பணியாற்றிய அனுபவம் கஷ்டமாக இருந்தாலும், டார்ச்சராக இருந்தாலும், தினமும் ஷூட்டிங்கை மிகவும் ரசித்தோம். இதில் நடித்திருக்கும் குழந்தை மகிழ், எங்களை ஆசீர்வதிக்க வந்த தெய்வம் மாதிரி. பாண்டிராஜ் நிறைய எழுதி வைத்திருக்கிறாரே... ஒரு வயது குழந்தை எப்படி நடிக்கும் என்று நாங்கள் யோசித்தோம். ஏற்கனவே ‘பசங்க’, ‘பசங்க 2’ ஆகிய படங்களை பாண்டிராஜ் இயக்கி இருந்தாலும், எங்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அதெல்லாம் எதுவும் இல்லை என்று, மிகவும் அற்புதமாக நடித்தது அக்குழந்தை. ஒருகட்டத்தில் எங்களை அது நன்கு புரிந்துகொண்டது.
ஆனால், என்னை பார்த்தால் மட்டும் பயப்படும். கதையில் முதலில் ஆண் குழந்தை இருந்தது. மகிழினிக்காக அதை மாற்றினோம். மகிழ் வரும் ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டமாக, ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்கும். சந்தோஷ் நாராயணன் மிகச்சிறப்பாக இசை அமைத்துள்ளார்’ என்றார்.