Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விஜய் ஆண்டனியை வியக்க வைத்த ஹீரோயின்

‘அருவி’, ‘வாழ்’ ஆகிய படங்களை தொடர்ந்து அருண் பிரபு புருஷோத்தமன் எழுதி இயக்கியுள்ள படம், ‘சக்தித் திருமகன்’. இதில் அரசியல் புரோக்கர் வேடத்தில் நடித்துள்ள விஜய் ஆண்டனி கூறுகையில், ‘தமிழ் சினிமாவில் ‘டாப் 5’ படங்களில் ஒன்று, ‘அருவி’. இந்திய அளவில் ‘டாப் 3’ இயக்குனர்களில் ஒருவர், அருண் பிரபு புருஷோத்தமன். சர்வதேச அளவில் படம் இயக்கக்கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது. அவர் எப்போது வந்தாலும், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் கம்பெனி திறக்கும். சில வருடங்களாக நான் இசை அமைப்பில் கவனம் செலுத்தவில்லை. ‘சக்தித் திருமகன்’ வெளியீட்டுக்கு பிறகு மீண்டும் நான் இசை அமைப்பதில் அதிக கவனம் செலுத்துவேன். எனது 50வது வயதில் நான் நடித்துள்ள 25வது படம் இது.

அருண் பிரபு புருஷோத்தமன் எப்போதுமே நாயகியை தேர்வு செய்வதில் தனித்தன்மை கொண்டிருப்பார். அவரது படத்தில் வரும் நாயகி, பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பார். ஒருநாள் திரிப்தியை எனக்கு அறிமுகம் செய்தார். இந்த கேரக்டருக்கு வேறு யாரையும் என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை’ என்று வியந்தார். ‘அருவி’ படத்தில் அதிதி பாலனையும், ‘வாழ்’ படத்தில் டிஜே பானுவையும் அருண் பிரபு புருஷோத்தமன் அறிமுகப்படுத்தினார். ‘சக்தித் திருமகன்’ படத்தில் திரிப்தி ரவீந்திராவை அறிமுகப்படுத்துகிறார். விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ள திரிப்தி ரவீந்திரா, ‘தி டே ஆஃப்’ என்ற குறும்படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர். இந்தி டி.வி தொடரிலும், படத்திலும் நடித்துள்ளார்.