Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பழங்குடியினர் பற்றிய பேச்சு; மன்னிப்பு கேட்டார் விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த சூர்யா, பூஜா ஹெட்டே நடித்த ரெட்ரோ பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், ‘‘பயங்கரவாதிகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்குடியினர் போல் அறிவை பயன்படுத்தாமல் சண்டை போடுகிறார்கள்’’ எனக் கூறியிருந்தார். அவர் பேசியது சர்ச்சையான நிலையில் தெலுங்கானா பழங்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கிஷன் ராஜ் சவுகான், விஜய் தேவரகொண்டா மீது எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது: பழங்குடியின சமூகத்தை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்களை புண்படுத்துவது எனது நோக்கமில்லை. நான் ரெட்ரோ பட விழாவில் பழங்குடியின என்ற வார்த்தையை பயன்படுத்தியது வரலாற்று அகராதியில் இருக்கும் அர்த்தத்தை குறிக்கும் நோக்கில்தான். இருப்பினும் நான் பேசியது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.