Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மகனுக்காக கதை கேட்கிறாரா விஜய் சேதுபதி?

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகி, சூர்யா விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான ‘பீனிக்ஸ்: வீழான்’ என்ற படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது சூர்யா விஜய் சேதுபதி பேசுகையில், ‘இப்படத்தை பார்த்துவிட்டு பல்வேறு தரப்பினர் என்னையும், படக்குழுவினரையும் பாராட்டினர். அனல் அரசு என்னை தேர்வு செய்யவில்லை என்றால், இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். தயாரிப்பாளர் ராஜலட்சுமி, இயக்குனர் அனல் அரசு, மற்ற நடிகர்-நடிகைகள் எனக்கு ஆதரவு கொடுத்தனர்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ், இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் மிகப்பெரிய பலமாக இருந்தனர். நடிப்பில் எனக்கு மிகப்பெரிய ஒரு எதிர்காலம் காத்திருக்கிறது என்று சொன்ன அனைவருக்கும் என்னுடைய நன்றி. தொடர்ந்து ஆக்‌ஷன் ஹீரோவாக நடிப்பதா? காதல் கதை கொண்ட படங்களில் நடிப்பதா என்பதை காலம் தீர்மானிக்கும். அடுத்த படத்தில் நடிப்பதற்கு கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். முதலில் எனக்கு கதை பிடித்திருக்க வேண்டும். அதற்கு பிறகு அப்பா விஜய் சேதுபதி கதையை கேட்டுவிட்டு, நடி என்று சொன்னால் நடிப்பேன்’ என்றார்.