Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தியேட்டரில் விமர்சனத்துக்கு வீடியோ எடுக்க தடை: விஷால் திடீர் அறிவிப்பு

சென்னை: ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்”. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது: படங்களுக்கு விமர்சனம் என்பது வேண்டும். இனி வருங்காலங்களில் ஒரு படம் வெளியாகும்போது முதல் 12 காட்சிகள், அதாவது முதல் 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் பப்ளிக் ரிவியூ என்ற பெயரில் பேட்டி எடுக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தேவைப்பட்டால் தியேட்டருக்கு வெளியே எடுத்துக் கொள்ளட்டும் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் படம் பார்த்து அவர்களே சொந்தமாக விமர்சனம் கொடுக்கட்டும். சினிமாவை காப்பாற்ற இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும்’’ என்றார்.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குனர் பி. வாசு, இயக்குனர் சுராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.