சென்னை: சமீபத்தில் நடந்த திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டிருந்தார். அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த விஷால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் பதறியபடி விஷாலை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். விஷாலுக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் தான் அப்படியானதாக கூறப்பட்டது. இதற்கிடையே அன்று அவர் சாப்பிடவில்லை என்றும்...
சென்னை: சமீபத்தில் நடந்த திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டிருந்தார். அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த விஷால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் பதறியபடி விஷாலை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். விஷாலுக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் தான் அப்படியானதாக கூறப்பட்டது. இதற்கிடையே அன்று அவர் சாப்பிடவில்லை என்றும் அதனால் மயங்கினார் என்றும் விஷாலின் நட்பு வட்டாரம் தெரிவித்தது.
ஆனால், விஷால் குடித்துவிட்டு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று சிலர் கருத்துக்களை கூறி விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இப்போது இது குறித்து மவுனம் கலைத்துள்ளார் விஷால். ‘‘அது எப்படி, சிலர் அவர்கள் கற்பனைக்கு சென்று என்ன வேண்டுமென்றாலும் பேசுகிறார்கள். 2 வருடத்திற்கு முன்பே குடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைப்பிடிப்பதை 5 வருடத்திற்கு முன்பே நிறுத்திவிட்டேன். நான் பார்ட்டிக்கே போறது கிடையாது. நான் கடைசியாக சுந்தர் சி சார் பர்த்டே பார்ட்டிக்கு தான் போனேன்’’ என்று விஷால் தெரிவித்துள்ளார்.